பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு

Thermo-Care-Heating

power_starசென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் டாக்டர் சீனிவாசன். இவர் அக்கு பஞ்சர் டாக்டர் தொழில் செய்து வந்தவர். பின்னர், சொந்தமாக ‘லத்திகா’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர் ஐ, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பன உள்பட பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தனது நண்பரான சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர் அர்த்தநாரியிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தான் பெற்ற கடனுக்காக, நடிகர் சீனிவாசன் தலா ரூ.1 லட்சம் என 5 செக்குகளை அர்த்தநாரியிடம் வழங்கியுள்ளார்.

அந்த செக்குகள் வங்கிகள் பணம் இருப்பு இல்லை என செக் திரும்ப வந்துள்ளது. இது தொடர்பாக சீனிவாசன் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அர்த்தநாரி, சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு கணேசன் முன்னிலையில் ‘செக்‘ மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ideal-image

Share This Post

Post Comment