கோச்சடையான் பட விவகாரம் – லதா ரஜினிகாந்த் மனு தள்ளுபடி

Facebook Cover V02
kochadayanகோச்சடையான் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது.
ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் (ஜூலை 3-க்குள்) லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, லதா ரஜினிகாந்த் ரூ.9.20 கோடி கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ.80 லட்சம் கொடுப்பது தொடர்பாக லதா ரஜினிகாந்த் மனு செய்திருந்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் நிலுவைத் தொகையை ஜூலை 3-க்குள் செலுத்தவும் உத்தரவிட்டது.

Share This Post

Post Comment