நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படத்தில் இனி நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

ekuruvi-aiya8-X3

Keerthy-Sureshநடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடத்தில் நடத்த நடிகையர் திலகம் என்ற படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த படம் மகாநதி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு லட்டு பிரசாதங்கள் வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ என்ற தமிழ் படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.
இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார். கீர்த்தி சுரேஷை பார்க்க கோவில் அருகே ரசிகர்கள் சூழ்ந்து நின்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினர்.

Share This Post

Post Comment