மீண்டும் வருவேன்; நம்புங்கள்! – ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ

Thermo-Care-Heating

simbuசிம்பு தற்போது மணிரத்னம் படம், ஹாலிவுட் படம் என ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் இசை என பிசியாக இருக்கிறார். சில காலங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளத்திலிருந்து சிம்பு வெளியேறினார். நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் அவர் பேசியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள்.

சமூக வலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்!

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment