மகனுக்காக புதிய அவதாரம் எடுத்த சிங்கமுத்து

sdsd
Singamuthuசிங்கமுத்து தயாரித்து வரும் படம் ‘பாசக்கார கூட்டம்’. இதில் சிங்கமுத்து மகன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்குரிய அனைத்து பாடல்களையும் சிங்கமுத்து எழுதி இருக்கிறார்.
இந்த படத்துக்கு, ஸ்டீபன் ராயல் இசை அமைக்கிறார். இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.வி.ரமணன் உள்பட பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் சவுண்டு என்ஜினீயராக பல படங்களுக்கு பணியாற்றியவர். இதுவரை இவர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஸ்டீபன் ராயல் இந்த படம் பற்றி கூறுகிறார்.
“சிங்கமுத்து தயாரிக்கும் படத்தில் 50 இசை கலைஞர்களை வைத்து வித்தியாசமான பாடல் ஒன்றை பதிவு செய்திருக்கிறேன். சின்மயி ஹரிசரண் பாடியுள்ள ‘எங்க குலசாமி…மல்லிகைப்பூ’ பாடல் மிகுந்த வரவேற்பை பெறும். ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டும் காரணம் அல்ல. பாடல் ஆசிரியர், பாடகர், சவுண்டு என்ஜினீயர் என்று பலருடைய திறமையும் அதில் இருக்கிறது.
இந்த படத்தில் சிங்கமுத்து சாரின் அழகான பாடல் வரிகள், இனிய இசை, அருமையான ஒலிப்பதிவு அனைத்தும் சேர்ந்து பாடல்களுக்கு இனிமை சேர்த்திருக்கின்றன. எனவே, இந்த படத்தின் எல்லா பாடல்களும் வரவேற்பு பெறும். ‘குற்றாலம்’, ‘ஆனந்தமழை’ படங்களுக்கும் இசை அமைத்துள்ளேன்” என்றார்.

Share This Post

Post Comment