‘காலா’ படத்தின் கதை இது தான் – மனம்திறந்த படக்குழு

ekuruvi-aiya8-X3

kaalaகாலா படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாக தோன்றுகிறார் ரஜினி.

அட்டகத்தி, மெட்ராஸ் என்று இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருந்த பா.ரஞ்சித்துக்கு ரஜினியே அழைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். தன் குடும்பத்தை இழந்து வாடும், தேடும் ஒரு தலைவனின் கதையை உணர்ச்சிபூர்வமாக சொல்லியது கபாலி படம். அந்த படத்தில் தன் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்ததால் மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு வழங்கினார் ரஜினி. காலா படத்தில் ரஜினி மூலம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித். முக்கியமாக தற்போதைய அரசியலை படம் பேசியிருக்கிறது என்கிறார்கள்.

‘நாட்டில் ஒரு பக்கம் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டாலும் பணக்காரர்கள் தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நடுத்தர மக்களும் ஏழைகளும் அப்படியே தான் இருக்கிறார்கள். மும்பை தாராவியில் வசிக்கும் 70 சதவீதத்துக்கும் மேலான தமிழர்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. வசிக்க வீடு இல்லை.

அங்கு காலம் காலமாக சொந்த இடம் இன்றி தவிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு உதவி செய்யத் தொடங்குகிறார் திருநெல்வேலியில் இருந்து செல்லும் காலா என்கிற கரிகாலன். அங்கிருக்கும் அரசியல்வாதி நானா படேகரின் பகையை சம்பாதிக்கிறார்.

பின் மக்களால் தலைவனாக்கப்படும் ரஜினி நானா படேகரை எப்படி வென்று மக்களுக்கு நில வசதி செய்து தருகிறார் என்பதே கதை. இது சமூக பிரச்சினையை விரிவாக பேசும் படம். படத்தில் அரசியல் இருக்காது. ஆனால் படம் பார்ப்பவர்களை அரசியல் பேச வைக்கும் என்று சொல்கிறது படக்குழு.

ரஜினி அரசியலில் இறங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படம் அவர் நடித்து வெளிவருவது அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காலா பாடல் வீடியோவில் கூட `தெருவிளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம் நாங்க உயரத்துல’ என்று வரும் வரிகளின்போது நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதாவின் நினைவு அஞ்சலி படம் வருகிறது. இது படத்தில் இடம்பெற்ற காட்சியா? இல்லை பாடல் வீடியோவுக்காக சேர்க்கப்பட்டிருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காலா படத்தில் சமகால பிரச்சினைகளையும் பலவற்றை தொட்டிருக்கிறார்கள். அது ரஜினியின் அரசியல் வருகைக்கு உதவி செய்யும் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

Share This Post

Post Comment