அஜித்தின் அடுத்த படத்தை இவரா தயாரிக்கிறார்?

ekuruvi-aiya8-X3

ajith_boni-kapoorஅஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித் -சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகத் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இன்னும் இதுவே உறுதியாகாத நிலையில், தற்போது இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவிக்கும், அஜித்துக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது. அதனால்தான் ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார் அஜித். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment