கொம்பு மீச கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி

ekuruvi-aiya8-X3

vsetupathyதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன்  தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த  வருடக் கணக்கை தனது ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் வேதா படத்தில் ஒருபகுதியை நடித்த விஜய் சேதுபதி, தற்போது, ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம்  இயக்கத்தில் ‘கருப்பன்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் கொம்பு வச்ச  தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மேலும்  வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.

இதுதவிர ‘கவண்’, ‘கருப்பன்’, ‘விக்ரம்-வேதா’, ’96’, ‘அநீதி கதைகள்’ உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

Share This Post

Post Comment