முடிஞ்சா இவன புடி – ஆகஸ்ட் 12 ரிலீசாகும் – கே.எஸ்.ரவிக்குமா

ekuruvi-aiya8-X3

cinema110816கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘முடிஞ்சா இவன புடி’. கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்கா படத்தின் தோல்வியால் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தினால்தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கினர்.

இதனால் திட்டமிட்டப்படி ‘முடிஞ்சா இவன புடி’ படம் வெளியாகுமா? என்ற நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான ராம்பாபு, ‘லிங்கா’ படத்தை மனதில் வைத்துக்கொண்டு ‘முடிஞ்சா இவன புடி’ படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடக்கிறார்கள். இதை நான் சட்டப்படி முறியடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இதுகுறித்து கூறும்போது, ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு இந்த படத்தை ‘ரஜினி வழங்கும்’ என்றுதான் தனது பேனரில் அச்சிட ஆசைப்பட்டார். ஆனால், ரஜினி விருப்பம் இல்லாமல் அப்படிச் செய்யக்கூடாது என்பதால், அதை கைவிட்டுவிட்டார். அதன்பிறகு ராக்லைன் வெங்கடேஷ், ராம்பாபுவின் நெருங்கிய நண்பர். அவர்மீது கொண்ட அன்பின் காரணத்தால் தனது பேனரில் ராக்லைன் வெங்கடேஷ் என்ற பெயரை போட்டார்.

அதனால், ‘முடிஞ்சா இவன புடி’ வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றம் ஏற்பட, ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் பணம் கேட்டு வந்தனர். நேற்று இரவே பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது. எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதி ‘முடிஞ்சா இவன புடி’ திரைப்படம் ரிலீஸாகும் என்றார்.

Share This Post

Post Comment