கோலிசோடா-2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Facebook Cover V02

cooli_sodaரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கோலிசோடா-2’.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகிய ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.

எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஆடியோ டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டிரைலர் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கிளப்போர்ட்டு நிறுவனம் சார்பில் வி.சத்யமூர்த்தி கைப்பற்றியிருக்கிறார்.

போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

Share This Post

Post Comment