சன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகர்

ekuruvi-aiya8-X3

Sunny-Leoneசன்னி லியோன் ஆபாசப்படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனம் ஆடியதன் மூலம் தமிழிலும் கால்பதித்த அவர், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

தமிழில் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா வந்தபோது அவரைக்காண ஆயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்று முதல் மலையாளத் திரைப்படத்தில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறி வந்தார்.

தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தப் படத்தை கண்ணசைவு புகழ் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ பட இயக்குனர் ஒமர் லுலு இயக்குகிறார். சன்னி லியோனுடன் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயராம் மற்றும் ஹனிரோஸ் நடிக்க உள்ளனர்.

Share This Post

Post Comment