பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம் – பெண்களுக்கு கமல் அறிவுரை

biboss_kamalபிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.

முதல் பாகத்தில் ஆரவ், ஓவியா காதல், ஜூலியின் நாடகம், ஓவியா தற்கொலை முயற்சி, காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா நெருக்கம், ஒரே படுக்கையில் ஆணும் பெண்ணும் என வேறு பாதையில் செல்கிறது.

இதை எல்லாம் கமல் நேர்த்தியாக சமாளித்து வருகிறார். யாரும் மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்களது தவறை உணரும் வகையில் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பினார்.

மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில வி‌ஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘‘இங்கு எல்லை மீறிய சில வி‌ஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாகிடக் கூடாது” என்றார்.

“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார்.

இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.

பொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-

“பொன்னம்பலம் – அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில வி‌ஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.

நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமாவில் நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார்.


Related News

 • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
 • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
 • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
 • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
 • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
 • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
 • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
 • மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *