மெரினா புரட்சிக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

Thermo-Care-Heating

sivakarthikeyan09‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர்.

கடந்த வருடம் இதே நாளில் (ஜனவரி 8-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கி நடைபெற்ற போராட்டத்தை மைய்யப்படுத்திய திரைப்படமாம். எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ideal-image

Share This Post

Post Comment