ஹாலிவுட் படத்தில் தடம் பதிக்கும் நெப்போலியன்

Thermo-Care-Heating

nepoliyanகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

நெப்போலியன் இந்த படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இதில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடிக்கிறார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக்கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். இவருடன் ஜெஸி ஜென் சென், பாபிலேனென், ஜான்.சி பார்மன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹிப்ஹாப் பாடகர் எமினெம்மின் சகோதரர் நாதன் மாதேர்ஸ் இமதில் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இதற்கு இசை அமைத்துள்ள ஸ்விப்ட்டி மக்வே ஒரு பாத்திரத்திலும் நடிக்கிறார். இதில் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங் ஒளிப்பதிவு செய்கிறார்.

அமைதியான ஒரு பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், அமானுஷ்ய நிகழ்வுகளும் பெரிதும் பாதிக்கிறது. இதற்கு காரணம் நைன் ரூஜ் என்ற ஒரு அமானுஷ்ய சக்தி என்பதை விசாரணை அதிகாரி பின்னிக் அறிகிறார். டெட்ராய்ட் நகரை அழிவிலிருந்து காப்பதற்கு அவர் என்ன செய்தார்? என்பது மீதிகதை.

ideal-image

Share This Post

Post Comment