சரத்குமார்-ராதிகா மகள் திருமணம்

ekuruvi-aiya8-X3

radika_daughterசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் இன்று காலை நடந்தது.

மணமகன் பட்டுவேட்டி பட்டுசட்டை அணிந்திருந்தார். மணமகள் ரேயான் சந்தன கலரில் பட்டுச்சேலை கட்டியிருந்தார். வேத மந்திரங்கள் ஓத வைதீக முறைப்படி திருமணம் நடந்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அவரது தோழி சசிகலா நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்.

நடிகர்கள் பிரபு, விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், பாக்யராஜ், பார்த்திபன், ராதாரவி, ராம்கி, ராஜேந்திர பிரசாத், மோகன்ராம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, கன்னட நடிகர் புனித்ராஜ்குமார், வாசுவிக்ரம், விஜய் ஆதிராஜ்.

பட அதிபர்கள் ஏ.வி.எம். சரவணன், அபிராமி ராமநாதன், சுரேஷ் பாலாஜி, புஷ்பா கந்தசாமி, எடிட்டர் மோகன்,

கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன், இசை அமைப்பாளர் தேவா, டைரக்டர்கள் மணிரத்னம், பாரதிராஜா, சந்தான பாரதி, கஸ்தூரிராஜா, சி.வி.ராஜேந்திரன், ஹரி, கவுதம்மேனன், பாலாஜி மோகன், தினேஷ் ராஜா, பின்னணி பாடகி எஸ்.பி.சைலஜா.

கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் மனைவி சங்கீதா, நடிகைகள் ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி, ரேவதி, லதா, ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, மாளவிகா, லிசி, பிரீத்தா ஹரி, காயத்ரி ரகுராம், நிரோஷா, மேனகா, பழம்பெரும் நட்சத்திர தம்பதி ஏ.எல்.ராகவன்-எம்.என்.ராஜம்.

முன்னதாக சென்னை நட்சத்திர ஓட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் கவுதம், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், டைரக்டர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி.

லதா ரஜினிகாந்த், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, சுகாசினி, திரிஷா, குஷ்பு, மீரா ஜாஸ்மீன், சினேகா, நடிகர்கள் ராஜ்குமார், பிரசன்னா, சாந்தனு, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, கீர்த்தி சாந்தனு, பிரித்திவி, ராம்கி, நிரோஷா உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Share This Post

Post Comment