ரெமோ படத்தின் சென்சார் முடிவு வெளியானது

Facebook Cover V02

Remo)=2709சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, சீன் பூட், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை குழுவினருக்கு படக்குழுவினர் நேற்று அனுப்பி வைத்தனர். இன்று இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

‘ரெமோ’ படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment