புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்

Facebook Cover V02

puriyatha_puthirவிஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இது ஜனவரி 13-ம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பெரே‌ஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் வெளியிடுகிறார். இதற்கு தணிக்கை துறையினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளார். இதுகுறித்து கூறிய ஜே.சதீஷ்குமார்….

“ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப்படத்துக்கு வழங்க வைப்பது ‘யு’ சான்றிதழ் தான். அதை பெற்றுஇருக்கிறோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் புரியாத புதிர் படத்தை ஜனவரி 13-ந்தேதி வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.

Share This Post

Post Comment