ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டு தாருங்கள் ஜெனீவா கூட்டத்தில் இயக்குனர் கவுதமன் பேச்சு

Facebook Cover V02

gowtamanஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன் பேசியதாவது:-

ஈழத்தமிழர்கள் கோரி நிற்பது தங்களின் உரிமையான நீதியையும், நியாயத்தையும் மட்டும் தான். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படுவது ராணுவத்தின் பீரங்கிக்குண்டுகளும், துப்பாக்கி குண்டுகளும், விமானக்குண்டுகளும் தான். மொத்தத்தில் 1979-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இன்றுவரை 38 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் தொடர்ந்து ராணுவ சட்டத்தின் கீழான ஆட்சிக்கு உட்பட்டுள்ளனர்.ஜனாதிபதி உள்பட அனைத்து சிங்களவர்களின் பார்வையில் இலங்கை ராணுவம் வெற்றி வீரர்களாகவும், புனிதர்களாகவும் கருதப்படுகின்றனர். ஆனால் ஈழத்தமிழ் மக்களின் பார்வையில் ராணுவத்தினர் கொலை எந்திர ராணுவமாகவும், பாலியல் வல்லுறவு புரியும் ஒருவகை பிராணிகளாகவும் பார்க்கப்படுகின்றனர். இது தான் இலங்கையின் அரசியல் யதார்த்தம்.

தமிழ் மண்ணை சிங்கள ராணுவமும், போலீசும், புலனாய்வுத்துறையினரும், துணை ராணுவப்படையினரும், குண்டர் படையினரும் இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கின்றனர். ஆயுதம் தாங்கிய இந்த கொலை ராணுவத்தின் நடமாட்டத்தைக் காணும் குழந்தைகளும், பெண்களும் கூடவே இளைஞர்களும் கலக்கமும், பீதியும் அடைந்த வாழ்விற்கு உட்பட்டு அல்லல்படுகின்றனர். இந்த கொலை எந்திர ராணுவப் பிடியிலிருந்து தமிழ் மக்களுக்கு உடனடி விமோசனம் கிடைக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் ஆன அனைத்தையும் செய்தாக வேண்டும். காலங்காலமாக மறுக்கப்படும் எங்கள் உரிமைகளை மீட்டுத்தாருங்கள், காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Share This Post

Post Comment