கமல் வரிகளில் `விஸ்வரூபம்-2′ பாடல்கள்

viswaroopamகமலஹாசன் இயக்கத்தில் அவரே நடித்து, கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவாகி வந்த இப்படத்தின் முதல் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.

இந்நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் சட்ட சிக்கல்களால் `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் கிடப்பில் போடப்பட்டதால், கமல் `உத்தம வில்லன்’, `பாபநாசம்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட படங்கள் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, `சபாஷ் நாயுடு’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், `விஸ்வரூபம்’ பற்றிய அறிவிப்பை கமல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தலைப்பில் உருவாகி வரும் `விஸ்வரூபம்-2′ படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட அனைவரும் நடித்துள்ளனர்.

`விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போது, அதன் இரண்டாவது பாகத்திற்குமான காட்சியையும் கமல் எடுத்துவிட்டார். இந்நிலையில் 10 நாள் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்து படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், `விஸ்வரூபம்-2′ குறித்து புதிய தகவல் ஒன்றை கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது,

” `விஸ்வரூபம்-2′ படத்தின் பாடல் காட்சிகள் தயாராகியுள்ளது. ரசிகர்களின் மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசையை கொடுத்த ஜிப்ரானுக்கும், பாடகர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் `விஸ்வரூபம்-2′ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பாடலை கமலே எழுதியிருக்கிறார். இந்தி பதிப்பிற்கு பிரசூன் ஜோஷி எழுதியிருக்கிறார். தெலுங்கு பதிப்பு தயாராகி வருகிறது” என்று கமல் தெரிவித்திருக்கிறார்.


Related News

 • உலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்
 • ஜானு கதாபாத்திரத்தில் நான் இல்லை என்கிறார் சமந்தா
 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *