சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார் – இலியானா

ekuruvi-aiya8-X3

Illianaவிஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. இந்தி, தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஆண்ட்ரூவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் வெளியாகி வருகின்றன. இலியானாவும் ஆண்ட்ரூவை காதலிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

காதலர் ஆண்ட்ரூ பற்றி இலியானா கூறியதாவது:–

‘‘ஆண்ட்ரூவை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். அவர் திறமையானவர். உறுதியான மனநிலையைக் கொண்டவர். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்து இருக்கிறார். அவருடைய புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். மற்றவர்களை விட தனித்திறமை கொண்டவர். என்னுடைய சினிமா தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறார். நான் நடித்த எல்லா படங்களையும் பார்த்து விட்டார். எனது நடிப்பை மனதார பாராட்டுவார்.

எனக்கு வருத்தம் வருவது மாதிரி எந்த கருத்தும் சொல்வது இல்லை. உற்சாகம் அளிப்பது போலவே பேசுவார். சினிமாவில் சாதிப்பதற்கு அவர் ஊக்கப்படுத்தி வருகிறார். ஆண்ட்ரூவோடு இருந்தால் நேரம் போவதே தெரியாது. அவர் எனது வாழ்க்கையில் வந்த பிறகு சந்தோஷமாக இருக்கிறேன்.

அவர் சிறந்த புகைப்பட கலைஞராகவும் இருக்கிறார். என்னை அழகாக படம்பிடித்து இருக்கிறார். இதற்கு முன்பு யாரும் என்னை இந்த அளவுக்கு அழகாக படம் பிடித்தது இல்லை. எனது தோற்றத்தை அவரது கேமராவில் மிகவும் ரசித்தேன். ‘மேக்கப்’ போடாமலேயே என்னை அழகாக படம் பிடித்தவர் ஆண்ட்ரூதான்.’’

இவ்வாறு இலியானா கூறினார்.

Share This Post

Post Comment