ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஸ்ரீதேவி

ekuruvi-aiya8-X3

sridevi_22பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களில் பிரபாஸ், அனுஷ்கா வேடங்களுக்கு அடுத்து முக்கியமான கதாபாத்திரம் சிவகாமி பாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்துக்கு முதலில் ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் ஸ்ரீதேவி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதாகவும்,இன்னும் சில கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் ஸ்ரீதேவியை தவிர்த்த ராஜமௌலி பின்னர் அந்த பாத்திரத்துக்கு ரம்யாகிருஷ்ணனை தெரிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்தின் நாயகியாக ஸ்ரீதேவியை தெரிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் நாயகனாக மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment