சூர்யா பற்றிய விமர்சனம் – தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

Facebook Cover V02

surya-21தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார்.

இந்நிலையில், மேற்படி விமர்சனத்தை வெளியிட்ட தொலைக்காட்சி சேனலுக்கு நடிகர் சங்கம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது,

சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.

சட்டத்தின்படி, இதுர சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.

ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான – அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.

நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment