வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

ekuruvi-aiya8-X3

aishwarya1ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்த ‘ஏ தில் ஹைமுஷ்கில்’ படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததால் ஐஸ்வரியா ராயுடன் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார், கணவர் ஆகியோர் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று வதந்தி பரவியது.

இந்த நிலையில், வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் சூரிய வழிபாட்டு விழாவான ‘சாத்பூஜை’ யில் கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா பச்சன், குழந்தை ஆரத்யா ஆகியோருடன் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களையும் இணைய தளத்தில் வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது பற்றி  ஐஸ்வர்யா ராய், கூறுகையில், “தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதில் கவனமாக இருக்கிறேன். எந்த ஒரு பிரச்சினை என்றாலும் என் குடும்பத்துக்குத்தான் முதல் இடம் தருவேன். யார் என்ன வேண்டுமானலும் பேசட்டும். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment