என் அழகின் ரகசியம் தெரியுமா? – அனுஷ்கா

anushka_1211அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தற்போது 36 வயது. ஆனாலும் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக நடிக்கும் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி.3’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், பாக்மதி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படம் போன்றவற்றிலும் நடிக்கிறார். நாகார்ஜுனாவுடன் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பக்தி படத்திலும் நடிக்கிறார்.

அனுஷ்காவின் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். அடுத்த வருடம் அவரது திருமணம் நடக்கும் என்று தெலுங்கு பட உலகினர் உறுதிப்படுத்துகிறார்கள்.

அனுஷ்கா இந்த வயதிலும் இளமை தோற்றத்தில் இருக்கும் தனது அழகு ரகசியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“நான் அழகாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளுமே காரணம். நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்ந்தால் வசீகரமாக இருக்கலாம். தினமும் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன்மூலம் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. எலுமிச்சை சாற்றை சருமத்தில் பூசலாம். கூந்தல் நீளமாக வளர்வதற்கு தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை தலையில் தேய்க்கலாம்.

நான் இவற்றை அடிக்கடி பயன்படுத்துகிறேன். உடம்பை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் அவசியம். நான் தினமும் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்கிறேன். எண்ணெயில் செய்த உணவு வகைகளை தொடுவது இல்லை. சாப்பாட்டில் நிறைய காய்கறிகள் சேர்த்துக்கொள்வேன். பழங்களும் சாப்பிடுவேன். இரவு உணவை படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முடித்து விட வேண்டும். சாப்பிட்டு விட்டு உடனே படுக்கைக்கு செல்வது நல்லது அல்ல. ஆரோக்கியத்தை கெடுத்து விடும்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


Related News

 • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
 • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
 • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
 • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
 • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
 • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
 • சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து
 • இப்போ ஹீரோக்கள் கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள் – பேரரசு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *