செல்வராகவன் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சிறப்பு விருந்து

Thermo-Care-Heating

nenjam_19தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் கடைசியாக, ‘இரண்டாம் உலகம்’ கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் படங்களை இயக்குவதற்கு சிறிய இடைவேளை எடுத்திருந்த செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கி இருக்கிறார்.

3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்கு முன்பாக தனது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து அளிக்க செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.

அதாவது, இன்று மாலை 7 மணிக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்படும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து படம் வருகிற ஜுன் 30-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.

ideal-image

Share This Post

Post Comment