விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக் குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

vijay-setupathiயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முக்கியமாக திரிஷா உள்ளிட்ட சில கதாநாயகிகளே விஜய் சேதுபதியின் தோற்றத்தை பகிர்ந்து இவரை பார்த்தால் எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த தோற்றம் பற்றி தியாகராஜன் குமரராஜா கூறும்போது ‘ஷில்பா கேரக்டரை எப்படி யோசித்து டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புகொண்டது பெரிய வி‌ஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர் ரொம்பவே மெனக்கெட்டார்’ என்று கூறியுள்ளார்.


Related News

 • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
 • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
 • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
 • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
 • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
 • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
 • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
 • மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *