அதுபோன்ற ஒரு வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் – ராஷி கண்ணா

rashi_kannaதெலுங்கின் முன்னணி நடிகையான ராஷி கண்ணா தமிழுக்கு வருகிறார். வந்த வேகத்திலேயே விஷாலுடன் அயோக்யா (டெம்பர் பட ரீமேக்), சித்தார்த்துடன் சைத்தான் கே பச்சா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, அதர்வாவுடன் இமைக்கா நொடிகள் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:-

நயன்தாராவுடன் நடித்த அனுபவம்?

அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் அவரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுகொள்கிறேன்.

எப்படி படங்களை தேர்வு செய்கிறீர்கள்?

இப்போதைய காலகட்டத்தில் நிறைய நல்ல நல்ல கதைகள் வருகின்றன. கதையையும் அதில் எனது பங்களிப்பையும் தான் முதலில் பார்ப்பேன். ஒரு சாதாரண கமர்ஷியல் நடிகையாக இருந்துவிட்டு போக விரும்பவில்லை. முழு பவுண்டட் ஸ்க்ரிப்டையும் முதலில் படிப்பேன். அதன் பின்னர் ஒவ்வொரு காட்சியிலும் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே படத்தை தேர்ந்தெடுக்கிறேன்.

தமிழுக்கு வர ஏன் தாமதம்?

நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நான் எனது சினிமா வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் செய்யவில்லை. தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். இப்போது தான் தமிழில் வாய்ப்புகள் வருகின்றன. படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. கடந்த ஆண்டு ஒரு மலையாள படத்தில் கூட நடித்தேன். கதைதான் முக்கியம்.

இமைக்கா நொடிகளில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

எனது கதாபாத்திர வடிவமைப்பு தான் காரணம். மலையாளத்தில் வில்லன் படத்திலும் எனக்கு சின்ன வேடம் தான். ஆனால் நல்ல பெயர் கிடைத்தது.

தமிழில் குரல் கொடுப்பீர்களா?

இமைக்கா நொடிகள் படப்பிடிப்புக்கு முன்பே ஒரு டீச்சர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன். டப்பிங் பேச தயாராக இருக்கிறேன்.

உங்கள் கனவு வேடம்?

சவாலான வேடங்கள் அத்தனையிலும் நடிக்க ஆசை. நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதுபோன்ற ஒரு வேடம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.


Related News

 • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
 • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
 • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
 • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
 • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
 • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
 • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
 • மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *