அஜித்தை புகழும் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜி மெகிக்

ekuruvi-aiya8-X3

vivekmஅஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷராஹாசன் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 24-ந் தேதி திரைக்கு வருகிறது. அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெகிக் நடித்திருக்கிறார். இந்த அனுபவம் பற்றி கூறிய அவர்…

‘விவேகம்’ உலகத்தரம் வாய்ந்த படம். இதன் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெருமை. ஹாலிவுட் நாயகன் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘தி நவம்பர்மேன்’ படத்தில் நான் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்கு அளித்தார் என அறிந்தேன்.

விவேகத்தில் எனது நடிப்பு மட்டுமல்ல ஆக்‌ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது. அதில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அஜித்தை இந்திய சினிமாவில் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் எளிமையாக பழகினார். ஆபத்தான சண்டை காட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார்.

மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே. ‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் பெரிய அளவில் உண்மையாக உழைத்தது. இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் பெரிதும் ரசித்துகொண்டாடுவார்கள் என உறுதியாக சொல்லுவேன்” என்றார்.

Share This Post

Post Comment