சிங்கப்பூர் உணவகத்தில் நடிகை ஸ்ரீதேவி பொம்மை

Thermo-Care-Heating

sridevi1203நடிகை ஸ்ரீதேவி மரணம் திரையுலகை உலுக்கியது. அவர் மறைவுக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் இரங்கல் கூட்டங்கள் நடந்தன. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்று ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள். சென்னையிலும் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

வெளிநாட்டு ரசிகர்களும் ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இணையதளங்களிலும் அவரது திரையுலக சாதனைகளை புகழ்ந்து கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஸ்ரீதேவி உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து இருக்கிறார்கள்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ideal-image

Share This Post

Post Comment