ரஷ்யா மீதான தடைகள் தொடர வேண்டும் – கனடிய வெளிவிவகார அமைச்சர் விளக்கம்

ekuruvi-aiya8-X3

christ1ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர வேண்டியமைக்கான காரணத்தினை கனடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட் (CHRYSTIA FREELAND) தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டில் இடம்பெறும் நேட்டோ அமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட அவர் நேற்று (புதன்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய அவர், “உக்ரேன் நாட்டிற்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தினை தம்வசப்படுத்தியோடு உக்ரேனின் மீதான இராணுவ நடவடிக்கை போன்றவற்றினால் ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது” என்றும் ஆகவே இத்தடைகள் தொடரவேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரஷ்யா சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக, ரஷ்யா மீது பல்வேறுபட்ட தடைகளை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment