நீண்ட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபனுடன் இணையும் பிரபல நடிகர்

ekuruvi-aiya8-X3

partibanபார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பார்த்திபன் – பிரபுதேவா இருவரும் ஏற்கனவே `ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் – பிரபுதேவா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர்கள் தவிர்த்து இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பிரபுதேவா தற்போது யங் மங் சங், லக்‌ஷ்மி, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment