பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி

ekuruvi-aiya8-X3

anjali-11அஞ்சலிக்கு இன்று 32 வது பிறந்தநாள். காணாமல் போனவர் மீண்டு வந்து தற்போது தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பேய் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மை டியர் லிசா, 3டியில் உருவாகும் ஓ ஆகிய பேய் படங்களில் நடிக்கிறார்.

சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, சினிமாவில் ஒரு அங்கமாக எப்போதுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால், அஞ்சலி நன்றாக நடித்திருக்கிறார் என மக்கள் மனதில் பதிவேன்.

அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து நடிப்பேன். கமர்ஷியல் படங்களில் மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு படங்களில் மட்டுமே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றார்.

Share This Post

Post Comment