காஜல் அகர்வாலிடம் 2 முறை காதலை சொல்லிய நடிகர்

ekuruvi-aiya8-X3

kajal_agarwalதமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். இந்திபட உலகிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா உள்பட ஏராளமான ஹீரோக்களுடன் காஜல் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த தெலுங்கு பட உலக நாயகர்கள் குறித்து அவர் இப்படி கூறுகிறார்…

“மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும். அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார். ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்று கூறியுள்ளார்.

உங்களுடன் நடித்த ஹீரோக்களில் யாராவது உங்களை காதலிக்க முயற்சி செய்தார்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த காஜல், “நவ்தீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார்” என்று பதில் அளித்து இருக்கிறார்.

Share This Post

Post Comment