ஹன்சிகாவிற்கு கை கொடுக்கும் தனுஷ்

Facebook Cover V02

hansika_danushதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அதர்வாவுடன் ‘100’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் தலைப்பை அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி காலமானதால், அறிவிப்பை ஒத்திவைத்தார்.

தற்போது அந்த தலைப்பை நடிகர் தனுஷ், நாளை இரவு 8.30 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார். ஹன்சிகாவின் முதல் தமிழ் படமான ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment