சல்மான் கான் படத்தை இயக்கும் பிரபுதேவா?

ekuruvi-aiya8-X3

prabu_devaபிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த வாரம் வெளியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் தீவிர புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார் பிரபுதேவா.

இந்த புரோமோஷன் வேலைகளில் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார் பிரபுதேவா. சில காலமாக படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு, “படம் இயக்குவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன், கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன். மேலும், சல்மான் கான் நடிக்கவிருக்கும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது” என்றார்.

சல்மான் கானில் தபாங் முதல் இரண்டு பாகங்களும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சல்மானை வைத்து ‘வான்டடு’ (Wanted) படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார்.

Share This Post

Post Comment