தனுசுடன் டூயட் பாடி நடிக்க ஆசை – மிஷ்டி

Facebook Cover V02

danush_mishtiஅதர்வாவின் ‘செம போத ஆகாத’ படத்தில் நடிப்பவர் மிஷ்டி. இவர் பெங்காலி நடிகை. மிகவும் திறமையான நடிகை என்ற பெயர் இவருக்கு இருக்கிறது. மலையாளத்தில் ‘ஆதம்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தனுசின் தீவிர ரசிகை என்று சொல்லும் நடிகை மிஷ்டி அதுபற்றி கூறும்போது…

“நான் தனுஷ் நடித்த சில படங்களைப் பார்த்து அவரது தீவிர ரசிகை ஆகி விட்டேன். அவருடன் படத்தில் நடிக்க வேண்டும். ‘டூயட்’ பாட வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது. தனுசுடன் உடனடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், தமிழில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முதலில் அதில் நடிக்கிறேன். அதற்குள் ‘செமபோத ஆகாத’ படம் திரைக்கு வந்து விடும். பின்னர் தனுசுடன் இணைந்து நடிக்கும் முயற்சியில் நேரடியாக இறங்குவேன்” என்றார் ஆர்வமுடன்.

Share This Post

Post Comment