பாய் பிரண்டுடன் திருமணத்தில் கலந்துக் கொண்ட ஸ்ருதிஹாசன்

ekuruvi-aiya8-X3

sruti_07தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் தற்போது கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலுக்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. இந்நிலையில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, சில தினங்களுக்கு முன்பு தாய் சரிகாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இந்நிலையில் ஆதவ் கண்ணாதாசன் – வினோதினி திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இரவு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் காலை திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த திருமணத்தில் கமலும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment