விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு – தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு

ekuruvi-aiya8-X3

vishal-06ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.
ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு முன் சலசலப்பு ஏற்பட்டது. தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வாக்குவாதம் செய்தார். இதை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்து விட்டார்.
தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம் விஷால் புகார் மனு அளித்திருக்கிறார். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றியும், வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகள் பற்றியும் விளக்கி இருக்கிறார். மேலும் வேட்பு மனு விவகாரத்தில் தன்னிடம் மட்டுமே பாரபட்சம் காட்டப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக, தமிழக ஆளுநரையும் சந்திக்க இருக்கிறார் விஷால்.

Share This Post

Post Comment