நந்தினியின் கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன?

ekuruvi-aiya8-X3

nandini_karhiநேற்று நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான கருத்த வேறுபாடு காரணமாக நந்தினியின் கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயனுக்கும், நந்தினிக்கும் திருமணமான தருணத்திலேயே ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார்த்தியேகன் எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடித்தத்தில், கார்த்திகேயன் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கார்த்திகேயனிடம், நந்தினி விவாகரத்து கேட்டு தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயனின் அம்மா சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நந்தினியிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நந்தினி-கார்த்திகேயன் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் திருமணத்தின் போதே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.

மேலும் கார்த்திகேயனுக்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், கார்த்திகேயனுக்கு திருமணம் ஆனதால், வெண்ணிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெண்ணிலாவின் கடிதத்தில் கார்த்திக் பெயர் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்தது உள்ளிட்ட பிரச்சனைகள் தான் இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. மேலும் வேலைவாங்கி தருவதாகக் கூறி கார்த்திகேயன் சிலரை ஏமாற்றியதால், நந்தினி, கார்த்திகேயனை பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, கார்த்திகேயனின் பெற்றோர், நந்தினியின் குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Post

Post Comment