கபாலி முதல்நாள் வசூல் இவ்வளவு இருக்க முடியாது – வர்த்தகர்கள்

Kapali_vasulஇந்திய படம் ஒன்று ரிலீசான முதல் நாளில் ரூ.250 கோடியை வசூலிக்க முடியாது என்று கூறுகிறார்கள், வணிக நிபுணர்கள். ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி திரைப்படம், ரிலிசான முதல் நாளிலேயே ரூ.250 கோடியை வசூலித்ததாக சமூக வலைத்தளங்களில், தகவல் வெளியானது. இதன்பிறகு, இந்த வசூல், படத்தின் பல்வேறு ‘ரைட்ஸ்’, வெளிநாட்டு உரிமம் உள்ளிட்ட பலவும் சேர்ந்தது என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், கபாலி தயாரிப்பாளர் தாணுவோ, அப்போதைக்கு வெயிட் செய்யுமாறு பதில் அளித்தார்.

ஆனால், இந்த வசூல் சாத்தியமில்லை என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள். பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி, கமல் ஜியான்சந்தானி கூறுகையில், ஒரு இந்திய திரைப்படம் முதல் நாளில் ரூ.250 கோடியை வசூலிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

அப்படி ஒரு வசூல் வர வேண்டுமானால், இந்தியாவில் 6 ஆயிரம் மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில், அதாவது, 12 ஆயிரம் ஸ்கிரீன்களிலாவது படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டில் 2500 திரைகளிலாவது வெளியாகியிருக்க வேண்டும். அப்படி வெளியானால்தான் முதல் நாளில் ரூ.250 கோடி வசூலாகும் என்று தெரிவித்தார்.

ஆனால் கபாலி உலகம் முழுக்க சேர்த்து மொத்தமே 4 ஆயிரம் ஸ்க்ரீன்களில்தான் திரையிடப்பட்டது என்பது இதில் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு ஒரு ஸ்க்ரீன் என்ற அளவில்தான் தியேட்டர்கள் எண்ணிக்கை உள்ளது. அதே நேரம் சீனாவில், 10 லட்சம் பேருக்கு 23 ஸ்கிரீன்கள் உள்ளன.

“இந்தியாவின் 100 கோடி மக்களில் சுமார் 3.5 கோடி மக்கள், படம் வெளியான முதல் நாள், தவறாமல் தியேட்டர்களுக்கு படையெடுத்து சென்றால் ரூ.300 கோடியை வசூலிக்க முடியும். ஆனால் நம்மிடம் அந்த அளவுக்கு தியேட்டரும் இல்லை.. அப்படி மக்கள் வரவும் மாட்டார்கள்” என்கிறார், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவன சர்வதேச வருவாய் பிரிவு தலைவர் கிரிஷ் ஜோகர்.

இந்தியாவில் வெளியான பிரபல திரைப்படங்களான பிகே, சுல்தான், பஜ்ரங்கி பைஜான், பாகுபலி மற்றும் கபாலி ஆகியவை சுமார் 4500 முதல் 5 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின. டிக்கெட் விலையை சராசரியாக ரூ.300-350 என வைத்துக் கொண்டாலும், ரூ.250 கோடி வசூல் ஆகாது.

டிக்கெட் விலை எல்லா தியேட்டர்களிலும், குறைந்தபட்சம் ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தால்தான் அது சாத்தியம். அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று மற்றொரு திரைப்பட வர்த்தக நிபுணர் தெரிவித்தார்.

எதை நம்புவது என்று புரியவில்லை…..

13631524_1035894399841520_136390949971295818_n
Tamil Fest 26, 27, 28 Aug 2016 (AD)

Share This Post

Post Comment