நெருக்கமாக நடிப்பதில் தவறில்லை – ப்ரியங்கா சோப்ரா

Thermo-Care-Heating

pchopraஇந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் நடிகையாகிவிட்டார். அங்கு கவர்ச்சி வி‌ஷயத்தில் எல்லையை கடந்து நடிக்கிறார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ வில் ஆங்கில நடிகருடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருக்கிறார். இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது பிரியங்கா சோப்ரா அளித்த பதில்…

“ நான் அந்த தொடரில் இப்படி நடித்ததில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது. இங்குள்ள இந்தி படங்களை மக்கள் பார்த்தது இல்லையா?. ‘குவாண்டிகோ’ சீரியலில் ஒரே ஒரு வித்தியாசம். அதில் எனது பாய்பிரண்டு வெள்ளைக்காரர். இந்தி படங்களில் எப்படி நடித்தேனோ அப்படித்தான் இந்த சீரியலிலும் நடித்து இருக்கிறேன்.

நான் ஒரு நடிகை, படத்துக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க வேண்டும். அப்படித்தான் ‘குவாண்டிகோ’ தொடருக்கும் ஒரு காட்சி தேவைப்பட்டது நடித்தேன். எனக்கு என்று ஒரு எல்லை வைத்திருக்கிறேன். எல்லா படங்களிலும் அதை கடைபிடிக்கிறேன். நிச்சயம் அதை மீற மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment