இறைவி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட மோகன்

Thermo-Care-Heating

Mohan_tmகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘இறைவி’. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா பட இயக்குனராக நடித்திருக்கிறார். இவர் இயக்கிய படத்தை தயாரிப்பாளர் விஜய் முருகன் வெளியிடாமல் இருப்பார். வில்லன் விஜய் முருகன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மோகனை கார்த்திக் சுப்புராஜ் அணுகியதாக கூறப்படுகிறது.

ஆனால் மோகன் வில்லன் கேரக்டரில் நடிக்க மறுத்து விட்டதாகவும் அதன் பின்னர்தான் அந்த கேரக்டரில் விஜய் முருகனை நடிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.

1980களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த மோகன் நடிப்பில் கடைசியாக ‘சுட்டபழம்’ என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment