பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண்

ekuruvi-aiya8-X3

arrest22பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்களில் ஒருவர் போலீசில் சரணடைந்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில், பாவ மன்னிப்பு கேட்ட தனது மனைவியை 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 5 பாதிரியார்களையும் சர்ச் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து புகாருக்கு உள்ளான பாதிரியார்களில் 3 பேர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மேத்யூ என்ற பாதிரியார் கொல்லம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.

Share This Post

Post Comment