திருவடிநிலை, காட்டுப்புலம் கரையில் தொழிலுக்கு தடை; ஆக்கிரமித்த விகாரை, வீடுகளால் மீனவருக்கு நேர்ந்த அவலம்
Apr 06 2012 02:43:00
இந்த விடயம் தொடர்பாகத் திருவடிநிலை கெங்காதேவி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் பல்வேறு தரப்பினருக்கும் மனுக்களை அனுப்பி வைத்துள்ளது.
 
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
இந்தக் கரையோரப் பகுதியில் பெரியளவில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் தொழிலைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தோம். இந்த நிலையில் அந்தப் பகுதிக் கடற்பரப்பில் தொழில் செய்வதற்குக் கடற்படையினர் அனுமதி மறுத்திருந்தனர்.
 
தற்போது விகாரை அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் வீடமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
தற்போது தொழிலுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள கடற்பகுதி களங்கட்டி மீன்பிடிக்கு உகந்த இடம். இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் இருந்து பெரும் வருவாயைப் பெற்றோம்.
 
தற்போது இந்தப் பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் எமது தொழிலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானத்தைப் பெற முடியாமையால் பெரும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 
இந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் கட்டப்பட்டுவரும் வீடுகளே எம்மை இந்த நெருக்கடி எமக்கு ஏற்பட காரணம் என்று கருதுகிறோம். இந்த விடயம் தொடர்பாக கடற்படையினருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால் இது குறித்து பதில் எதையும் அவர்கள் கூறவில்லை.
 

எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பகுதிகளில் தொழில் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது

 
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

Read More >

Sep 10 2012 11:11:39 [Tamil]

Read More >

Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.

Read More >

Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்

Read More >

Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்

Read More >

Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.

Read More >

Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று

Read More >

Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்

Read More >

Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்

Read More >

Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More >