சிறிலங்கா பிரதமரை வரவேற்ற சீன அதிபர்

ekuruvi-aiya8-X3

ranil-xi-jinpingசீனாவின் பீஜிங் நகரில் நேற்று ஆரம்பமான ஒரு அணை ஒரு பாதை உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்தித்துப் பேசினார்.

ஆரம்ப விழாவில் சிறிலங்கா பிரதமரை வரவேற்ற சீன அதிபர் சிறிது நேரம் கலந்துரையாடினார். இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை சீனா சென்றுள்ள சிறிலங்கா பிரதமருக்கும், சீன அதிபர் மற்றும் பிரதமருக்கு இடையில் அதிகாரபூர்வ பேச்சுக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சீனாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள மியான்மாரின் அரசவை உறுப்பினரான ஆங் சான் சூகிக்கும் சிறிலங்கா பிரதமருக்கும் இடையில் நேற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக மலேசியப் பிரதமரையும் சிறிலங்கா பிரதமர் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதேவேளை சீனா நடத்தும் ஒரு அணை ஒருபாதை உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment