கனடா சிறுவர் நலக் கொடுப்பனவு, சாதனை அளவான சிறுவர்களை வறுமையிலிருந்து விடுவிக்கும்- அமைச்சர் Jean-Yves Duclos

ekuruvi-aiya8-X3

அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க உள்ள கனடாவின் சிறுவர் நலக் கொடுப்பனவு (Canada Child Benefit) சிறுவர் வறுமையை 40% இனால் குறைக்கும் என குடும்பங்களிற்கான மத்திய அரசின் அமைச்சர் Jean-Yves Duclos கூறுகிறார்.

கனடாவின் புதிய சிறுவர் நலக் கொடுப்பனவுக்கான காசோலைகள் ஜூலை 1 இலிருந்து கிடைக்கப்பெறும். இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சரின் கூற்றுப்படி, இம்முயற்சியானது கனடாவின் வரலாற்றில் சிறுவர் வறுமையை பெரிதளவில் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும்.

இதன்மூலம் கனடாவில் சிறுவர் வறுமை 11.2% இலிருந்து 6.7 % ஆகக் குறைவடையும் , இது கனடாவில் ஒருபோதும் காணப்படாத அதிகுறைந்த வறுமை வீதமாக இருக்கும்.ava-williams.jpg.size.custom.crop.1086x723

Share This Post

Post Comment