சிரிய ரசாயன தாக்குதல் – சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா

ekuruvi-aiya8-X3
Chemical-arms-expertsசிரியாவின் டூமா நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது அரசுப் படைகள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் விஷ வாயுத் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு அமைப்புக்கு (ஓபிசிடபிள்யூ) சிரியாவும், ரஷியாவும் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சிரியாவில் கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. இதையடுத்து, புதன்கிழமையன்று, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் சென்று ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க மண் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகளைச் சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நிகழ்விடத்தில் உள்ள ஆதாரங்களை ரஷ்யா சிதைத்து இருக்கும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவின் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது.

Share This Post

Post Comment