சாவகச்சேரி சம்பவம் நாடாளு மன்றத்தில் விசேடஅறிவிப்பு – பிரதமர்: GL இடம் விசாரணை நடத்தப்படும்

ekuruvi-aiya8-X3

G.L pirishசாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை இன்றைய தினம், நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடப்போவதாகவும் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சுக்கான புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். –

இதேவேளை சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, ‘பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

Share This Post

Post Comment