பிரோம்ப்டனில் தாயைக் கத்தியால் குத்தி விட்டு தப்பித்த மகனுக்கு போலிஸ் வலைவீச்சு !!

Thermo-Care-Heating
பிரோம்ப்டனில் கடந்த ஞாயிறு இரவு 10:30 மணியளவில் Sled Dog ரோட்டில் நடந்துள்ளது இந்தச் சம்பவம். 21 வயது நபர் ஒருவர் 46 வயதாகும் பெண்மணியை கத்தியால் இருமுறை குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட நபரும் பெண்மணியும் தாய் – மகன் என்பது தெரிய வந்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் போராடிய அந்தப் பெண்மணி மீட்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கபப்ட்டுள்ளார். அவரது நிலைமை இன்னமும் கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குத்தி விட்டு தப்பிச் சென்ற 21 வயதாகும் நபரை தீவிரமாக தேடி வந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று பிற்பகல் அவரை கைது செய்துள்ளனர். ராஜ்விர் சஜன் என்ற அந்த நபர் இன்று கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறதுimage-brambton-kathi

ideal-image

Share This Post

Post Comment