கவ­ன­மின்றேல் கால­னாகும் கைய­டக்கத் தொலை­பே­சி

ekuruvi-aiya8-X3

shutterstock_116889376நவீ­னத்­து­வ­மான இன்­றைய உலகில் தொழில்­நுட்­பத்தின் வளர்ச்சி எவ்­வ­ளவு வேக­மாக இருக்­கின்­றதோ, அதே வேகத்தில் அதற்கு தன்னை அடி­மை­யாக்கிக் கொள்­ப­வன்தான் மனிதன்.

அந்த வகையில் இன்று அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்ள ஒரு பொருள் என்றால் அது கைய­டக்கத் தொலை­பே­சிதான். ஆரம்ப காலங்­களில் ஓர் குழந்தை பிறந்து வளர்ந்த உடன் முதலில் அவர்­களின் கைக­ளுக்கு கொடுப்­பது பென்சில், பேனை. ஆனால் இன்றோ கைய­டக்கத் தொலை­பேசி, ஐ பேட் என இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களே கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

ஒரு­வ­கையில் கூறப்­போனால், ஒரு­வரின் ஆக்கம் மற்­ற­வரின் அழி­வுக்கு கார­ண­மா­கு­வது உலக நியதி. என்­றாலும் கூட அநி­யா­ய­மாக பலர் தங்­களின் எதிர்­கா­லத்தை சூன்­ய­மாக்­கிக்­கொள்­வது தான் கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது. பொது­வாக, ஒரு­வரின் கவ­னக்­கு­றைவு தான் அவர்­க­ளுக்கு யம­னாக மாறி­வி­டு­கின்­றது. அதற்­காக கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை பயன்­ப­டுத்­து­வது முற்­றிலும் மனி­த­னுக்கு கேடு என்­ப­தல்ல விளக்கம்.

இன்­றைய பொழுதில் கைய­டக்­கத் ­தொ­லைபேசி இல்லை என்றால் அந்த நாளே நக­ராது என்­ப­து­தான்­அர்த்தம். அது­மட்­டு­மல்ல, பலர் அதற்கே அடி­மை­யா­கி­விட்­ட­தையும் காணலாம். ஒரு­வேளை உணவு இல்­லா­விட்­டாலும் பர­வா­யில்லை. கையடக்­கத்­தொ­லை­பேசி இல்­லாமல் இருக்க முடி­யாது என்­பதே அவர்­களின் நிலைப்­பாடு. எனினும், அதனை முறை­யாகப் பயன்­ப­டுத்­தினால் அநா­வ­சிய விப­ரீ­தங்­களை தவிர்த்­துக்­கொள்­ளலாம்.

அந்­த­வ­கையில், இவ்­வா­ரத்­தே­டலில் தொலை­பேசி மோகத்தால் ஏற்­படும் விப­ரீ­தங்­களை பற்றி பார்க்­க­வுள்ளோம்.

ஒரு சிலர் காலை விடிந்­தது முதல் 24 மணித்­தி­யா­லங்­களும் கைய­டக்­கத்­தொலை­பே­சி­யு­ட­னேயே சங்­க­ம­மா­கி ­வி­டு­கின்­றனர்.

கைய­டக்­கத் ­ தொ­லை­பே­சியில் உரை­யா­டிக்­கொண்டே வீதியை கடப்­ப­தையும், வெளி­யு­லகில் என்ன நடக்­கின்­றது என்­பதை சற்றும் உண­ராது வீதியில் பய­ணிப்­ப­தையும் நாம் அன்­றாடம் அவ­தா­னிக்­கின்றோம். அதிலும் காதலில்

வீழ்ந்­த­வர்­க­ளுக்கு குல தெய்­வமே கைய­டக்­கத்­தொ­லை­பே­சிதான். அந்த அள­வுக்கு மக்கள் மனதில் இடம்­பி­டித்­துள்­ளது அது.

அதே­வேளை அதனால் இன்று சமூ­கத்தில் ஏற்­ப­டு­கின்ற விபத்­துக்­களும் விப­ரீ­தங்­களும் ஏராளம். அதனை உணர்ந்­தி­ருந்தும் கூட அதி­லி­ருந்து மீள முடி­யா­த­வர்­க­ளாக இன்னும் பலர் சீர­ழி­கின்­றனர்.

cell-phone-accident-law-01கைய­டக்­கத் ­தொ­லை­பே­சி­யி­னூ­டாக எவ்­வ­ளவோ நல்ல பல பயன்­களை பெறத்­தக்­க­தாக இருந்­தாலும் அதை யாரும் உணர்ந்­த­வர்­க­ளாக, தெரி­ய­வில்லை. கடு­மை­யான சட்­டதிட்­டங்கள் எத்­தனை நடை­மு­றைக்கு வந்­தாலும் அவற்­றையும் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. இன்று சார­திகள் கூட ஒரு கையில் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­யையும் இன்­னொரு கையில் வாக­னத்­தையும் ஓட்­டு­கின்­றனர்.

அதிலும் பொலிஸார் நிற்கும் இடங்­களில் சாமர்த்­தி­ய­மாக தப்­பித்­துக்­கொள்­வதும் உண்டு. இவ்­வாறு மற்­ற­வர்­களை ஏமாற்­று­வ­தாக எண்ணி தன்னைத் தானே ஏமாற்­றிக்­கொள்­கின்­றனர். இதனால் அவர்­களே அவர்­க­ளுக்கு யம­னாகி விடு­கின்­றனர்.

பாது­காப்பு என்­பது எங்­க­ளுக்கு நாங்­களே உரு­வாக்­கிக்­கொள்ள வேண்­டி­யது. சட்­டங்­களும் அதற்­கா­க­வே­தான் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

ஆனால் இன்று வீதி விபத்­துக்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கைய­டக்­கத் ­தொ­லை­பே­சியும் ஒரு கார­ண­மா­கவே அமை­கின்­றது. தன்­னிலை மறந்து தொலைபே­சியில் உரை­யா­டிக்­கொண்டு வீதியை கடப்­பது, பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் ஒரு கையில் கைய­டக்­கத்­தொ­லைபே­சியை வைத்­துக்­கொண்டு அவ­ச­ரப்­ப­டு­வது என இன்னும் பல்­வேறு விட­யங்­களைக் கூறலாம்.

எது எப்­படி இருப்­பினும் கைய­டக்­கத்­தொ­லைபே­சியின் மோகத்தில் வெறு­மனே அதில் லயித்­துப்போய் வீதி ஓரங்­க­ளிலும் ரயில் கட­வை­க­ளிலும் மர­ண­மாக வேண்­டுமா? என்று சற்று சிந்­திப்­பது அவ­சியம்.

மோட்டார் சைக்­கிளை செலுத்­துவோர், தங்கள் ஹெல்­மட்­டுடன் சேர்த்து கைய­டக்­கத் ­தொ­லை­பே­சியை செருகிக் கொள்­வது, நடந்து கொண்டு, வீதியை கடந்­து­கொண்டு கைய­டக்­கத் ­தொ­லைபே­சியில் உரை­யா­டு­வது, வாக­னத்தை செலுத்தும் போது கைய­டக்­கத்­தொலை­பே­சியில் உரை­யா­டு­வது போன்­ற­வற்றை முற்­றாகத் தவிர்ப்­பதே வீணான விபத்­துக்­க­ளி­லி­ருந்து ஒருவர் தன்­னையும் பிற­ரையும் பாது­காத்­துக்­கொள்ள ஒரே வழி­யாக இருக்கும்.

இன்று இளைஞர், யுவ­திகள் மத்­தியில் அதிக விரும்­பப்­ப­டு­வது தங்­களை தாங்­களே செல்பி எடுத்­துக்­கொள்­வது. ஒரு­வ­கையில் இதனால் எத்­த­னையோ பேர் தங்­களின் உயி­ரையும் விட நேர்ந்­துள்­ளது. ஆற்­றிலும், மலை­யுச்­சி­யிலும் நின்று கொண்டு படங்­களை எடுத்து தடு­மாறி ­வீழ்ந்­துள்ள சம்­ப­வங்கள் எத்­த­னையோ இடம்­பெற்­றுள்­ளன. இருந்தும் இன்னும் அவற்றை பொழுது போக்­காக எண்­ணுவோர் பலர்.

அண்­மையில் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகம் மேற்­கொண்ட ஆய்வு ஒன்றிலும் 18 வய­துக்கும் 24 வய­துக்கும் இடைப்­பட்ட 69 சதவீத­மானோர் வீதியில் நடந்து செல்­கையில் தங்கள் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை உப­யோ­கிப்­ப­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே­வேளை 66 சதவீத­மானோர் ஏதேனும் செய்தி அல்­லது தகவல் பரி­மா­று­வ­தா­கவும் , 57 சதவீத­மானோர் உரை­யா­டிக்­கொண்டு செல்­வ­தா­கவும், 23 சதவீத­மானோர் முகப்­புத்­த­கத்தை பார்­வை­யி­டு­வ­தா­கவும், 18 சதவீத­மானோர் குறுந்­த­கவல் அனுப்­பு­வ­தா­கவும், 13 சதவீத­மானோர் மின்­னஞ்­சலை பார்­வை­யி­டு­வ­தா­கவும் குறிப்பிடப்பட்டுள்­ளது.

அதிகளவிலான இளம் வயது பெண்களும் ஆண்களும் தங்களை மெய் மறந்து கையடக்கத் தொலைபேசியில் உரையாடிச் செல்வதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம்.

அரசாங்கம் என்னதான் சட்டம் இயற்றினாலும், தண்டனை விதித்தாலும் அதையும் மீறி அவர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது என்பதே இன்றைய நிலையாகவுள்ளது.

குறைந்த பட்சம் தங்கள் நலனை முன்னிட்டேனும் ஒவ்வொருவரும் கையடக்கத் தொலைபேசி பாவனையின் போது மிகுந்த கவனத்துடன் செயற்படுவது அவசியமாகும்

Share This Post

Post Comment